“மறப்போம், மன்னிப்போம்: ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து”- எடப்பாடி பழனிசாமி

 

“மறப்போம், மன்னிப்போம்: ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து”- எடப்பாடி பழனிசாமி

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

“மறப்போம், மன்னிப்போம்: ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து”- எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அரசாணையில், “ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.7,700-இல் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு செய்யப்பட்டுள்ளது. வருகை பதிவேட்டின் படி, தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019 ஜனவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் வைத்த கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊதிய உயர்வுக்கு முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் நன்றி தெரிவித்துள்ளார். பணிநிரந்தரமும் சட்டசபையிலே அறிவிக்கவும், 2017 ஆம் ஆண்டு சட்டசபை அறிவிப்பின்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 12,500 பகுதிநேர ஆசிரியர்கள் 10 ஆண்டாக பணிநிரந்தரம் செய்யக்கோரி காத்திருக்கின்றனர்.