அரியர் தேர்வு விவகாரத்தில் யூஜிசி விதிமுறைபடி தான் நடப்போம்- முதல்வர் பழனிசாமி

 

அரியர் தேர்வு விவகாரத்தில் யூஜிசி விதிமுறைபடி தான் நடப்போம்- முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 10ம் வகுப்புத் தேர்வில் ஆல் பாஸ் செய்யப்பட்டது போல, கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள், தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதற்கு சென்னை பல்கலைக் கழகம் ஒப்புக்கொண்ட நிலையில், அண்ணா பல்கலைக் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக அண்ணா பல்கலைக் கழகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அப்படி எந்த ஒரு கடிதமும் கிடைக்கவில்லை என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி அடைய வைக்க முடியும்? தமிழக அரசின் முடிவு தவறானது என , அகில இந்தியத் தொழில்நுட்ப குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே தெரிவித்திருந்தார்.

அரியர் தேர்வு விவகாரத்தில் யூஜிசி விதிமுறைபடி தான் நடப்போம்- முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அரியர் தேர்வு குறித்த அரசின் முடிவில் மாற்றமில்லை. திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது. அரியர் தேர்வு விவகாரத்தில் யுஜிசி விதிமுறைகளின் படியே நடப்போம் என ஏற்கனவே கூறியுள்ளோம். நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றம் வரை சென்றது ஆனால் அங்கு நல்ல தீர்ப்பு கிடைக்க வில்லை. தமிழகத்தில் தேவைக்குத் தகுந்தாற்போல் தமிழ்நாடு தேர்வாணையத் துறை சார்பில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு எழுதி மீண்டும் வெற்றி பெற்று பணிக்கு செல்லலாம்” என தெரிவித்தார்.