உயர்கல்வி செல்வோர் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம்; இது ஒரு வரலாற்றுச் சாதனை- முதல்வர் பழனிசாமி

உயர்கல்வி செல்வோர் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம்; இது ஒரு வரலாற்றுச் சாதனை- முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் புதிதாக 7 அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.836.80 கோடிக்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா சிகிச்சைக்கு போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. தேவையான அளவு மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் தேவையான எண்ணிக்கையில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியால் தொற்று கட்டுக்குள் உள்ளது. தமிழகம் முழுவதும் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர் இருப்பார். மினி கிளினிக் திட்டம் மூலம் நோய் பாதிப்பை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்கல்வி செல்வோர் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம்; இது ஒரு வரலாற்றுச் சாதனை- முதல்வர் பழனிசாமி

விழுப்புரத்தில் குடிமராமத்து திட்டத்தால் விளைச்சல் அதிகரித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்; உயர்கல்வி செல்வோர் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம்; இது ஒரு வரலாற்றுச் சாதனை. விழுப்புரம் மாவட்டம் வானூரில் புதிதாக அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டு இந்தாண்டே மாணவர் சேர்கையும் நடைபெறும்” என தெரிவித்தார்.