கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பது உண்மைதான்; நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது- முதல்வர் பழனிசாமி

 

கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பது உண்மைதான்; நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது- முதல்வர் பழனிசாமி

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன், ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்திற்குபின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே உள்ள மாவட்டம் என்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. காய்ச்சல் சிறப்பு முகாம் பல்வேறு நடவடிக்கைகளால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது.

கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பது உண்மைதான்; நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது- முதல்வர் பழனிசாமி

திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகள் 386 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மழை நீர் ஒரு சொட்டு கூட வீணாக்காமல் விவசாய பணிகளுக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தில் மத்திய அரசின் சலுகைகளில் சில முறைகேடு நடைபெற்றுள்ளது. கிசான் திட்டத்தில் தவறு நடந்த இடங்களில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” எனக் கூறினார்.