காலி நிலமெல்லாம் திமுகவினரின் நிலமாகிவிடும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

காலி நிலமெல்லாம் திமுகவினரின் நிலமாகிவிடும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னையில் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

காலி நிலமெல்லாம் திமுகவினரின் நிலமாகிவிடும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சோழிங்கநல்லூரில் அதிமுக வேட்பாளர் கே.பி. கந்தனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவினர் செல்லும் இடம் எல்லாம் பழி சொல்லி குற்றச்சாட்டுகளை சொல்லி வாக்கு கேட்குகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்து ஒரு ஆண்டுகளே ஆகிறது. அதற்குள் டிஜிபி மீது குற்றஞ்சாட்டுகிறார். திமுக குடும்ப கட்சி, திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு முதலமைச்சர் அல்ல, பல முதலமைச்சர் தலைதூக்கிவிடுவார்கள். காலியாக இருக்கும் நிலத்தையெல்லாம் அவர்களுக்கு சொந்தமாக்கிவிடுவர்.

உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரானது போல கல்லூரியை கட்டுவேன், சாலையை கட்டுவேன் என வாக்குறுதி அளிக்கிறார். அவர் முதலமைச்சராவாரா? ஸ்டாலின் முதலமைச்சரா? கனிமொழி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதிமாறன் என பல முதலமைச்சர்கள் தோன்றி விடுவார்கள் நாட்டில் சட்டம், ஒழுங்கு இருக்காது. சீர் குலைந்துவிடும். நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள். இன்றே உதயநிதியின் ஆட்டம் தாங்க முடியல, நாளை ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும்” எனக் கூறினார்.