“துரைமுருகன் படிக்க உதவி செய்தது எம்ஜிஆர் தான்; இப்ப அவருக்கு கல்லூரி எங்கிருந்து வந்தது?”

 

“துரைமுருகன் படிக்க உதவி செய்தது எம்ஜிஆர் தான்; இப்ப அவருக்கு கல்லூரி எங்கிருந்து வந்தது?”

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள கால்நடைகள் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவில் பாடுபட்டவர்கள் யாரையும் ஸ்டாலினுக்கு தெரியாது. மக்களை ஏமாற்றுவதில் திமுகவின் செந்தில் பாலாஜி சிறந்தவர். திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பொய் பேசி வருகிறார். ஒரு எல்லை வரைக்கும் தான் பொய் மினு மினுக்கும். உண்மை எந்த நாளும் நிலைத்து நிற்கும். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் மாநிலம் தமிழகம். அதிமுக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக உள்ளது. மக்களவை தேர்தலின்போது ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது. பொய் பேசியே ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. இந்த முறை அது எடுபடாது. நான் முதல்வர் என என்றும் நினைத்து பார்த்தது கிடையாது. மக்கள்தான் முதல்வர். மத்தியில் இருந்து தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். 13 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோது என்ன கொண்டு வந்தார். 220 டெண்டர் திமுக ஆட்சியில் ஒருவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் துரைமுருகனுக்கு படிக்க உதவி செய்தார். படிக்கும்போது காசு இல்லாத துரைமுருகனுக்கு கல்லூரி எங்கிருந்து வந்தது. பொன்முடிக்கு எங்கிருந்து கல்லூரி வந்தது.

“துரைமுருகன் படிக்க உதவி செய்தது எம்ஜிஆர் தான்; இப்ப அவருக்கு கல்லூரி எங்கிருந்து வந்தது?”

திமுகவை சேர்ந்த 13 முன்னால் அமைச்சர்கள் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. அதிமுக மீது எவ்வளவு குற்றச்சாட்டு கூறினாலும் அதை பொய் என நிரூபிப்போம். எப்போது விவசாயிகளிக்கு சோதனை வருகிறதோ அப்போது எல்லாம் நேசக்கரம் நீட்டுவது அதிமுக அரசு. புயல், வெள்ளம், மழையால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது கூட்டுறவு கடன்களை ரத்து செய்ய கோரிக்கை வைத்தார்கள் அதன்படி ரத்து செய்யப்பட்டது. 2016ல் கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடனை ரத்து செய்தது அன்றைய முதல்வர் ஜெயலலிதா. 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய பயிர் கடன்களை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ளம், புயல் காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டை பெற்றுக் கொடுத்தது அதிமுக அரசு. கோதாவரி காவிரி இணைப்பு எங்கள் லட்சிய திட்டம் அதை நிறைவேற்றியே தீருவோம். இந்த திட்டத்தின் அவசியம் குறித்து பிரதமரிடம் பேசியுள்ளோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்” எனக் கூறினார்.