தொழில் தொடங்குபவர்களுக்கு 50% சலுகை வழங்கப்படும் – முதல்வர் அதிரடி

 

தொழில் தொடங்குபவர்களுக்கு 50% சலுகை வழங்கப்படும் – முதல்வர் அதிரடி

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தென்மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி, பெரம்பலூர், நாகை உள்ளிட்ட தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் என 22 மாவட்டங்களில் தொழில் துவங்குபவர்களுக்கு 50% சலுகை விலையில் நிலம், உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கும் வகையில் தொழில் கொள்கை அமைந்துள்ளது. சாலை என்பது பயணிப்பதற்கு மட்டும்தான், பந்தயத்திற்கானது அல்ல. இளைஞர்கள் தங்கள் சக்தியை ஆக்கப்ப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும்.

தொழில் தொடங்குபவர்களுக்கு 50% சலுகை வழங்கப்படும் – முதல்வர் அதிரடி

தமிழகத்தில்தான் சாலைவிபத்துக்குள் குறைவாக உள்ளன. சாலை பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், உற்பத்தித் துறையில் ஆண்டுக்கு 15 % வளர்ச்சியை அடைந்திடவும், மீண்டும் புதிய வெற்றிப் பயணத்தை துவக்குவதும், தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 இன் நோக்கம் ஆகும். சோதனைகளை சாதனையாக்கும் திறமை நிறைந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கப்படும். 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக முதலீட்டளர்கள் மாநாட்டுகளில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 சதவீதம் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.” எனக் கூறினார்.