வளர்ந்த நாடு செய்யாததை கூட நான் செய்துவிட்டேன் – முதல்வர் பழனிசாமி

 

வளர்ந்த நாடு செய்யாததை கூட நான் செய்துவிட்டேன் – முதல்வர் பழனிசாமி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் மடத்துக்குளத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “பொதுமக்களின் குறைகளைத் தெரிவிப்பதற்காக 1100 என்ற எண் பயன்பாட்டுக்கு வர உள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட கொரோனாவை கட்டுபடுத்த முடியவில்லை; ஆனால் நாம் கட்டுபடுத்தியுள்ளோம். நானும் அரசு பள்ளியில் படித்தவன்தான், வல்லரசு நாட்டில் கூட மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பது கிடையாது. அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வளர்ந்த நாடு செய்யாததை கூட நான் செய்துவிட்டேன் – முதல்வர் பழனிசாமி

கட்சியை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் ஸ்டாலின் போட்ட திட்டம் தவிடு பொடியாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் 2,000 மினி கிளினிக் திறக்கப்படும். நிருபர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள் 2,000 மினி கிளினிக் திறக்கப்படும். இஸ்லாமியர்களை பாதுகாக்கும் ஒரே அரசு அதிமுக அரசு. சாதி , மதத்தின் பெயரால் அரசியல் லாபம் ஈட்ட சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது அதிமுக. நானும் ஒரு விவசாயி. ஆதலால் அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து கடன்களை தள்ளுபடி செய்தேன்” எனக் கூறினார்.