ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்

 

ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்

மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கடலூர், நாகை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நாகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்கு முன் நடைபெற்றக் கூட்டத்தில், “கொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பிறகு தனி மாவட்டமாக இயங்கும். நாகை மாவட்டத்தில் 1016 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் 37 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். நீட் தேர்வை ஒத்தி வைப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன்.

ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்

குடி மராமத்து திட்டத்தின் கீழ் நாகையில் 1200 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 2,252 பசுமை வீடுகள் கட்டபட்டு உள்ளது. நாகை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் இல்லாமல் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்கள். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று, தற்போது சொல்ல முடியாது. 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்திற்கு பிறகே முடிவு எடுக்கப்படும்” எனக் கூறினார்.