சசிகலா, இளவரசியின் சொத்துக்களை முடக்கியது ஏன்?- எடப்பாடி பழனிசாமி

 

சசிகலா, இளவரசியின் சொத்துக்களை முடக்கியது ஏன்?- எடப்பாடி பழனிசாமி

சசிகலா, இளவரசி சொத்துகள், நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் அரசுடைமை ஆக்கப்பட்டதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் விடுதலை அரசியல் களத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டுவரும் சூழலில் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவிற்கு செல்லும் இடமெல்லாம், மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. அதிமுக கூட்டணியில் எந்த இழுபறியும் கிடையாது. ஜனநாயக நாட்டில் அடக்குமுறை என்ற கேள்விக்கு இடமில்லை. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்களைதான் நீக்கியுள்ளோம். கட்சிக்குள் உள்ள பிரச்னை பற்றி பேசியது திரித்து வெளியாகியுள்ளது. தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. அதிமுகவில் எந்த பிளவையும், யாராலும் ஏற்படுத்த முடியாது.

சசிகலா, இளவரசியின் சொத்துக்களை முடக்கியது ஏன்?- எடப்பாடி பழனிசாமி

ஒருபோதும் சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்க முடியாது. அவர்களுக்கு அதிமுக என்றும் தலை வணங்காது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவை அனைத்து தொண்டர்களும் நிறைவேற்ற வேண்டும். மக்கள் மனதில் என்றும் வாழக்கூடிய ஒரே தலைவர் ஜெயலலிதா. அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் சதி திட்டம் தீட்டிவருகின்றனர். அதிமுகவின் அடிமட்ட தொண்டதான் முதல்வராக முடியும், ஒரு குடும்பம் அதிமுகவை ஆள்வதற்கு அனுமதிக்கமாட்டோம். சசிகலா, இளவரசி சொத்துகள், நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் அரசுடைமை ஆக்கப்பட்டது.

அமமுகவிற்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை, மத்தியில் கூட்டணியில் இர்நுதபோது திமுக எந்த நன்மையும் செய்யவில்லை. கொரோனா காலத்திலும் அரசு ஊழியர்களுக்கு நிலுவை இல்லாமல் சம்பளம் வழங்கப்பட்டது.” எனக் கூறினார்.