32 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம்- முதல்வர் பழனிசாமி

 

32 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம்- முதல்வர் பழனிசாமி

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துறையாடலில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, இந்திய தொழில் வர்த்தகசபை, கொடீசியா உள்ளிட கோவையின் பல்வேறு தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “உங்களின் கோரிக்கைகளை அரசு நிச்சயமாக நிறைவேற்றித் தரும். வளமான தமிழகத்தை அமைக்க தொழில் மற்றும் விவசாய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். டெல்டா மாவட்டத்தில் கடைமடை வரை தண்ணீர் கொடுத்ததால் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். கொரோனா காலத்தில் 60 கோடி தொழில், வர்த்தகம் ஈர்த்து தமிழக அரசு சாதனைப்படைத்துள்ளது.

32 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம்- முதல்வர் பழனிசாமி

இந்தியாவில் சட்டம் ஒழுங்கில் முதன்மையாக சிறந்து விளங்கி தொழில் சிறப்பாக நடக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. தடை இல்லா மின்சாரம் மூலம் தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. என்னிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து திட்டங்களை அதிகம் பெறுகிறார் அமைச்சர் எஸ் பி வேலுமணி, சாலை கட்டமைப்பு வசதிகள் அதிக அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் அதிக அளவில் சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் சவாலாக உள்ளது. மக்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை அளிக்கும் கோவை, திருப்பூர் மாவட்டங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இன்னும் குறுகிய காலத்தில் தேர்தல் வர இருக்கிறது. எங்கள் அரசுக்கு தொழில் துறையினர் உறுதுணையாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.