Home தமிழகம் நானும் அரசு பள்ளியில் தான் படித்து வந்தேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நானும் அரசு பள்ளியில் தான் படித்து வந்தேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சென்னை வடக்கு மாவட்ட கழகம் சார்பாக சென்னை அசோக் நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சென்னை மாநகரம் தூய்மையான நகரமாக இருக்கிறது. நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய முடியும்?, அதனை கொண்டு வந்ததே திமுக தான். மத்தியில் காங்கிரஸ் இருந்தபோது தான் கொண்டு வந்தார்கள். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். ஏழை, எளிய மாணவர்களுக்கு 7.5% சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்து இருக்கிறோம். நானும் அரசு பள்ளியில் தான் படித்து வந்தேன். 313 பேருக்கு 7.5 % உள் ஒதுக்கீட்டால் அரசு கல்லூரில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அடுத்த ஆண்டு 400 பேருக்கு மேல் படிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்தாண்டு 11 மருத்துவகல்லூரிகள் உருவாக்கப்பட உள்ளன. 1550 இடங்கள் வர உள்ளன. மீன்பிடி தடைகாலத்தில் 5 ஆயிரம் கொடுத்தது அம்மாவின் அரசு. சென்னையில் வீடில்லாதவர்களுக்கு அம்மாவின் அரசு வீடுகட்டிக்கொடுக்கும். சென்னை மாநகரம் முழுவதும் 3லட்சம் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் அராஜக கட்சி.

எங்கு விலை உயர்ந்த நிலம் இருந்தாலும் அதை திமுகவினர் அபகரித்து விடுவார்கள். சட்டத்தின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இது மக்களுக்காக நடைபெறும் ஆட்சி. உள்ளாட்சி, வேளாண்துறை, கல்வியில், சுகாதாரத் துறையில் என பல்வேறு துறைகளில் தமிழக அரசு விருது வாங்கிக்கொண்டுள்ளது. இந்திய அளவில் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. நாட்டு நடப்பும் தெரியாது, நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட ஸ்டாலினுக்கு தெரியாது. புயல், மழை, கொரோனா அனைத்தும் வந்த போதும் விலை வாசி கட்டுப்பாட்டில் இருக்கிறது. வழங்கிக் கொண்டிருக்கிறோம். அதிமுக ஆட்சியில் ஊழல், ஊழல் என்று பேசுகிறார் ஸ்டாலின். வா….. மேடைக்கு துண்டுச் சீட்டு இல்லாமல் வா….பேசலாம். வேண்டுமென்றே திட்டமிட்டே பழி சுமத்துகிறார் ஸ்டாலின். ஊழல் காரணமாக கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவின் ஆட்சி.

நான் முதல்வர் ஆகும் போது 10 நாளில் ஆட்சியை விட்டு போய் விடுவேன் என்று கூறினார்,தற்போது ஆண்டு நிறைவு பெற்று இன்னும் முதல்வராக இருக்கிறேன். நான் முதல்வர் ஆகும் போது மக்களை சந்தித்து முதல்வர் ஆகவில்லை தான், கருணாநிதி என்ன மக்களை சந்தித்த முதல்வர் ஆனார் எனக்கூறினர். ஆனால் அவர் அண்ணா மறைவுக்கு பிறகு சூழ்ச்சி செய்து முதல்வர் ஆனார். ஸ்டாலின் அதிமுக கட்சி 3 ஆக உடைந்து விடும் என்று கூறுகிறார். உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றுங்கள். அதிமுக அரசைப் பொறுத்தவரை மடியிலே கனமில்லை, வழியில் பயமில்லை. அதிமுக எதிர்கட்சியாக கூட வராது என்கிறார் ஸ்டாலின் இப்படியே கனவு கண்டு கொண்டே இருக்கட்டும். பகுதிச் செயலாளராக என் பணியைத் துவக்கி இன்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக வந்துள்ளேன், நீங்கள் அப்படி வரவில்லை” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ட்விட்டரில் கமலுக்கு ஆதரவாக ட்ரெண்டாகும் #மன்னிப்பாவது_மயிராவது!

மக்கள் நீதி மய்யத்தின் 4 ஆவது ஆண்டு தொடக்க விழா நாள் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “முதுமையை கேலி செய்ய முடியாது. அது உங்களுக்கும் வரும் எனக்கும் வரும். ஆனால்...

தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 30 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா...

சரத்குமார் தலைமையில் உருவானது 3 அவது அணி! அதிமுகவுக்கு ஆபத்து!!

அதிமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியில்தான் உள்ளன என முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பிரேமலதா புலம்பிவருகிரார். அதேபோல் அதிமுக...

எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் இமான் அண்ணாச்சி!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட...
TopTamilNews