நாகை மாவட்டத்தில் விரைவில் உணவு பூங்கா அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

 

நாகை மாவட்டத்தில் விரைவில் உணவு பூங்கா அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

நாகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, “இந்தியாவிலேயே தமிழகம்தான் கொரோனா சிகிச்சை அளித்து குணமடைய செய்வதில் முதலிடத்தில் உள்ளது. நாகை மாவட்டத்தில் 432 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 17153 பேர் பரிசோதனை செய்துகொண்டு உள்ளார்கள். நோய் பரவலை தடுத்தல், மற்றும் குணமடைய செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழலில், தொற்று ஏற்பட்டவர்கள் அனைவருக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சரியான முறையில் சிகிச்சை அளித்து வருவதால் அதிக உயிரிழப்பு இல்லை. சவாலான நேரத்தில் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். எல்லா மாவட்டத்திற்கும் பரிசோதனை செய்து கொண்ட பிறகே நான் நிகழ்ச்சிக்கு செல்கிறேன். அரசு அறிவிக்கிற வழிமுறைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

நாகை மாவட்டத்தில் விரைவில் உணவு பூங்கா அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

வேளாண்துறையில் 100 சதவீத பணிகள் நடைபெறுகிறது. தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களை வைத்து இயக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் அதிக முதலீட்டை ஈட்டியுள்ள மாநிலம் தமிழகம் மட்டுமே. கொரோனா காலத்தில் 4 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் அரசின் சொந்த செலவில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அம்மா இரு சக்கர வாகனம், சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, நெல் உற்பத்தி, பயிர்க்காப்பீட்டு திட்டம் என அனைத்தும் நாகை மாவட்டத்திற்கு சிறப்பாக் வழங்கியுள்ளோம். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறோம். காவிரி நதிநீர் உரிமையை பெற 50 ஆண்டுகள் விவசாயிகள் போராடி வந்த நிலையில் நல்ல தீர்ப்பை சட்டத்தின் வழியில் பெற்று தந்துள்ளோம். நாகை மாவட்டத்தில்367 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் விரைவில் உணவு பூங்கா, ரெடி மேட் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். நாகை மாவட்டத்தில் 4 மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.