சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார், துரைமுருகன் தயாராக உள்ளாரா? – முதலமைச்சர் பழனிசாமி

 

சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார், துரைமுருகன் தயாராக உள்ளாரா? – முதலமைச்சர் பழனிசாமி

புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுக அரசை விமர்சிப்பதா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக சட்டமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் அறிக்கையில் முதல்வருக்கு சென்னையில் எதுவும் தெரியவில்லை, ஸ்டாலின் மேயராக இருந்தபோது நிறைய பாலம் கட்டினார் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருக்கு தான் எதுவும் தெரியவில்லை. சென்னை- போரூர் பாலம் அவசர கோணத்தில் அடிக்கல் நாட்டிவிட்டு சென்றுவிட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, நான் நெடுஞ்சாலை துறை அமைச்சரான பிறகு அதனை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொய்யான குற்றச்சாட்டை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். மேடவாக்கம், கீழ்கட்டலை, பெருங்களத்தூர், ஸ்டாலின் தொகுதியிலேயே கொளத்தூர் தொகுதியிலேயே பாலம் கட்டப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் 85 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. முன்னாள் மேயர் அவருடைய தலைவரை திருப்தி செய்ய பொய்யான அறிக்கையை சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார். ஊழலுக்கு சொந்தக்காரரே திமுக தான். துரைமுருகன் சொத்து விவரத்தை வெளியிடுவாரா?

சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார், துரைமுருகன் தயாராக உள்ளாரா? – முதலமைச்சர் பழனிசாமி

தேர்தல் நேரத்தில் கோடி கோடியாக பதுக்கி வைத்த பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதை அனைவரும் பார்த்தோம். வருமான வரித்துறை சோதனை நடத்தி ரூ.10 கோடிக்கு மேல் கைப்பற்றி உள்ளது, வழக்கு நிலுவையில் உள்ளது. என்னுடைய சொத்து விவரத்தை நான் வெளியிட்டுள்ளேன். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக தான். ஊழலின் ஊற்று கண் திமுக தான். ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர் எங்கள் மீது ஊழல் அறிக்கை வெளியிடுகிறார்.

பெண்கள் உரிமைகளை பாதுகாக்க எண்ணற்ற திட்டங்களை வெளியிட்டவர் ஜெயலலிதா. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நாட்டிலேயே முன்னோடி திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளேன். வரதட்சணை சட்டத்தின் கீழ் தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது. 2ஜி வழக்கில் சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் இ மெயில் மூலமாகவே டெண்டர் விடப்படுகிறது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என லெட்டர் பேட் டெண்டர் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல வழிகளில் அதிமுக ஆட்சியை கலைக்க திட்டமிட்டனர். கமல்ஹாசன் நடிப்பில் பெரிதாக இருக்கலாம், அரசியலில் பூஜ்ஜியம். கூட்டணி மந்திரி சபை கிடையாது என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. தமிழக மக்கள் எப்போதுமே கூட்டணி மந்திரி சபையை ஏற்க மாட்டார்கள்” எனக் கூறினார்.