பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பது தவறா?- முதலமைச்சர் பழனிசாமி

 

பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பது தவறா?- முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த எட்டிக்குட்டைமேடு அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக மட்டுமல்ல எந்த எதிர்க்கட்சி வந்து பரப்புரை செய்தாலும் எடப்பாடி தொகுதியில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ஸ்டாலினை போல் எத்தனை ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை வெல்ல முடியாது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 6 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை நிறைவேற்றிய போதும் எதிர்க்கட்சி தலைவர் திறமையில்லாத முதல்வர் என்று விமர்சிக்கிறார்.

பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பது தவறா?- முதலமைச்சர் பழனிசாமி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுப்பது தவறா? பொங்கல் பரிசை சுயநலம் என்று ஸ்டாலின் விமர்சிக்கிறார். கொரோனா, புயல் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் பொங்கல் பரிசை உயர்த்தி வழங்குகிறோம். மக்களின் நிலையறிந்து சூழ்நிலைக்கேற்ப பணம் வழங்குவதை சுயநலம் என்று சொல்வது நியாயம்தானா? விஞ்ஞான மூளையோடு பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கின்றனர் திமுக. நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஏமாற்றுகிறது திமுக

திமுகவின் தேர்தல் அறிக்கை அத்தனையும் பொய். ஸ்டாலின் கூறும் பொய்யான பரப்புரைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள். திமுகவிற்கு தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள். உழைக்கின்றவர் என்றைக்கும் வீண் போவதில்லை. நாங்கள் உழைக்கின்றோம்” எனக் கூறினார்.