சசிகலாவை மீண்டும் சேர்க்க மாட்டோம்; அவர் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது- முதல்வர் பழனிசாமி

 

சசிகலாவை மீண்டும் சேர்க்க மாட்டோம்; அவர் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது- முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கிய நிலையில் கூட்டணிக் குழப்பம், உட்கட்சி பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் அதிமுக தேர்தல் பணிகளை தாமதமாகவே தொடங்கியது. இந்த நிலையில் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவை மீண்டும் சேர்க்க மாட்டோம்; அவர் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது- முதல்வர் பழனிசாமி

தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் கூட்டத்தில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி, “சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாராளுமன்ற தேர்தல் தோல்வியால் துவண்டு போகின்ற கட்சி அதிமுக அல்ல. இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியை போல சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். நீட் தேர்வில் திமுக, காங்கிரஸ் செய்த துரோகங்களை மக்களிடம் விளக்கவேண்டும். 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு பெற்றுத்தந்த சாதனையை பொதுமக்களிடம் தொண்டர்கள் விளக்க வேண்டும்” எனக் கூறினார்.