இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

 

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் அவர்களுக்கு இ-பாஸ் தடையாக இருந்தது. பலர் ஒரே நேரத்தில் இ-பாஸ் கேட்டதால் பலரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கொரோனாவுக்கு பயந்த பொதுமக்கள், எப்படியாது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட ஒரு கும்பல் போலியாக இ-பாஸ் தயாரித்து விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்து வந்தனர். இதனால் அரசின் இ பாஸ் நடைமுறைக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பயது.

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

இந்நிலையில் இன்று மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “மக்கள் தேவையின்றி வெளியூர் செல்லக்கூடாது என்பதற்காகவே இ பாஸ் நடைமுறையில் இருக்கிறது. கொரோனா நோய் பரவலைத் தடுக்க இ பாஸ் நடைமுறை தேவையாக இருக்கிறது. அத்தியாவசியப் பணிகளுக்காக செல்வோருக்கு இ பாஸ் தடையின்றி வழங்கப்படுகிறது. கொரோனாவை எதிர்த்து கடுமையாக அரசு போராடியும் எதிர்க்கட்சிகள் குறை கூறத்தான் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். ஆளுங்கட்சியான எங்களுக்கு தான் பொறுப்பு உள்ளது. தமிழகத்தில் கூடுதலாக இ-பாஸ் வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.