2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்! அடித்துக்கூறும் எடப்பாடி பழனிசாமி

 

2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்! அடித்துக்கூறும் எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தப்படலாம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்! அடித்துக்கூறும் எடப்பாடி பழனிசாமி

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி இடைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்னும் திட்டமிடப்படவில்லை. 9 மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். கூட்டுறவு வங்கிகளில் அரசியல் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. எந்த ஆட்சியாக இருந்தாலும் வங்கி முறைகேட்டில் நடவடிக்கை எடுப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அனைத்திலும் முறைகேடு நடைபெற்றதாக தெரியவில்லை.
 
திமுக தேர்தல் அறிக்கையை என்றைக்கும் நிறைவேற்றியதாக வரலாறு இல்லை. முதல் கையெழுத்து நீட் ரத்து செய்வேன் என்று கூறிய ஸ்டாலின் அதை செய்யவில்லை. நாங்கள் போட்ட தீர்மானத்தையே அவர்களும் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர். நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையை நம்பி 43 லட்சம் பேர் காத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது கூட்டுறவு வங்கி நகைக்கடனே ரத்து ஆகவில்லை. திமுகவில் 13 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.

2024 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்படுகிறது. எனவே எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது” எனக் கூறினார்.