பொது போக்குவரத்து சேவை எப்போது?- முதலமைச்சர் பதில்

 

பொது போக்குவரத்து சேவை எப்போது?- முதலமைச்சர் பதில்

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 208 கோடி மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

பொது போக்குவரத்து சேவை எப்போது?- முதலமைச்சர் பதில்

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் 2021ல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று முடிவு வேண்டியது மக்கள்தான். மு.க.ஸ்டாலின் அல்ல. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு பற்றி ஆய்வு செய்ய தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்தபின் பொது போக்குவரத்தை இயக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே இப்போதைய நேரத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வாய்ப்பில்லை. ஊரடங்கு காலத்தில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டதால் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லை” எனக் கூறினார்.