“பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதே நாங்கள்தான் ” முதல்வர் பழனிசாமி

 

“பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதே நாங்கள்தான் ” முதல்வர் பழனிசாமி

திருப்பூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் , வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் , முடிந்த பணிகளை திறந்து வைத்தல் ,கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த முதலமைச்சர் பழனிசாமி அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தொழிலின் நிலைமை, விவசாயிகளின் கருத்துகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. கொரோனா பொதுமுடக்கத்தின் போது அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டது. அதனால் தான் தற்போது மீண்டும் வெளிமாநில தொழிலாளர்கள் இங்கேயே வந்துள்ளனர். பிற மாவட்டங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிகப்படியான காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. ரூ.1652 கோடி நிதி ஒதுக்கி ஆரம்பிக்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டம் தற்போது 40% பணிகளை எட்டியுள்ளது. பூரண மதுவிலக்கை தற்போதும் அமல்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம். முன்னர் இருந்ததை விட தற்போது மதுக்கடைகள் பாதி அளவாக குறைக்கப்பட்டுள்ளது.

“பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதே நாங்கள்தான் ” முதல்வர் பழனிசாமி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும், ஏழு பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை. பேரறிவாளனுக்கு பரோல் எங்கள் ஆட்சியில் வழங்கப்பட்டது. உயர்மின் கோபுரத்திட்டத்தில் மாற்றுத்திட்டம் இல்லை . நம் மாநிலத்திற்காகத்தான் மின்சாரம் கொண்டு வரப்படுகிறது . இதற்காக விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனக் கூறினார்.