எஸ்.பி.பிக்காக நானும் பிரார்த்திக்கிறேன்: முதல்வர் பழனிசாமி

 

எஸ்.பி.பிக்காக நானும் பிரார்த்திக்கிறேன்: முதல்வர் பழனிசாமி

தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1,064 ஆக உள்ளது. இதுவரை 860 பேர் குணமடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 11பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் 4பேர் தருமபுரியில் சேர்ந்தவர்கள். மாவட்டத்திற்கு தேவையான மருந்துகள் கைவசம் உள்ளது. தினமும் 58 காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்.பி.பிக்காக நானும் பிரார்த்திக்கிறேன்: முதல்வர் பழனிசாமி

தருமபுரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க, 49,531 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 29, 476 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஊரக குடியிருப்பு, பசுமை வீடுகள், 13,427வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஒகேனக்கல் குடிநீர் திட்டம் ஜல்சக்தி மிசின் திட்டத்தின் மூலம் ரூ. 450 கோடி மதிப்பில் செயல்படுத்த மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. ஒகேனக்கல் நீர்திட்டம் ஆய்வில் இருந்து வருகிறது. இரண்டாவது தலைநகர் என்பது அவரவர் கருத்து, அரசின் கருத்து இல்லை. கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தில் ஹிந்தி மூன்றாவது மொழியாக வெளியான விண்ணப்பம் போலியானது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாடகர் எஸ்பிபி உடல் நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டறிந்துள்ளார். அவரது உடல் நிலை குணமடைய நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.” எனக் கூறினார்.