Home தமிழகம் பொள்ளாச்சி புனித மண்; பெண்களுக்கு அரணாக அதிமுக அரசு உள்ளது- முதல்வர் பழனிசாமி

பொள்ளாச்சி புனித மண்; பெண்களுக்கு அரணாக அதிமுக அரசு உள்ளது- முதல்வர் பழனிசாமி

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தாலிக்கு தங்கம் 8 கிராமாக உயர்த்தி கொடுத்து வருகிறோம். பள்ளி செல்வதற்கு குழந்தைகளுக்கு புத்தக பை, சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்டவை தருவது ஜெயலலிதாவின் அரசு. வால்பாறை தொகுதியில் புதிதாக 5 காவல் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. அம்மா மினி கிளினிக் மாவட்டம் வாரியாக உருவாக்கியுள்ளோம். பரம்பிகுளம்-ஆழியாறு திட்டம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். சாலைகள், மேம்பாலங்கள் கொண்டு வந்துள்ளோம். இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தது அதிமுக அரசு தான்.

நாள்தோறும் பொய்யான அறிக்கைகள் கொடுத்து வருபவர் மு.க ஸ்டாலின். தமிழ்நாடு அமைதி பூங்காவாக தொடர வேண்டும் என்றால் அதிமுகவிற்கு வாக்கு அளியுங்கள். ஏழைகளுக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்தும் ஸ்டாலின் ஒரு தலைவரா? திமுக கட்சியில்லை, அது ஒரு கார்பரேட் கம்பெனி, குடும்பமாக இயங்கி வருகிறது. தில்லு இருந்தால் அதிமுகவுடன் நேரடியாக மோதுங்கள். தவறான செய்தியை பரப்பாதீர்கள். பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரம் கோவை. பெண்களுக்கு அரணாக அதிமுக அரசு உள்ளதுதிமுக ஆட்சியில் இருந்தபோது வீட்டு மக்களையே கவனித்துக் கொண்டார்கள். நாட்டு மக்களை கவனிக்கவில்லை. மீண்டும் அதிமுக தான் ஆட்சிக்கு வரவேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மக்கள் தெளிவாக சிந்திக்க தொடங்கி விட்டார்கள்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிதான் தொடரும். திமுக தலைவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலலிக்க தயாராக இருக்கிறேன். அதிமுகவை திமுகவால் நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை. பொள்ளாச்சி பிரச்சனையில் அதிமுக மீது வீண் பழி சுமத்துகிறது. பொள்ளாச்சி புனிதமான மண். அரசியலுக்காக மக்களை குழப்புகிறது திமுக.பொள்ளாச்சி பிரச்சினையில் பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர் திமுக வினர். அதிமுக அரசை பொருத்தவரை யார் தவறு செய்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஸ்டாலின் போடவிருக்கும் முக்கிய உத்தரவு!

திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்திருக்கிறது. மறுபுறம் வேட்பாளர்களை டிக் செய்வதற்கான நேர்காணல் நடந்துகொண்டிருக்கிறது. இரு நாட்களாக இந்த நேர்காணல் நடைபெற்றுவருகிறது.

ஜோலார்பேட்டை அருகே 3 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்!

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே ரயில் மூலம் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர்...

கைவிட்ட சசிகலா; தடா போட்ட எடப்பாடி… டிடிவி எடுத்த திடீர் முடிவு!

சசிகலாவை மலை போல் நம்பிக்கொண்டிருந்த டிடிவி தினகரனுக்கு நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதனால் தான் இரவோடு இரவாகப் பேட்டி கொடுத்த தினகரன், அமமுக சோர்வடைவது...

அரியலூரில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன பேரணி!

அரியலூர் அரியலூரில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தமிழக...
TopTamilNews