அழகிரி கட்சி ஆரம்பித்தால் திமுக உடையும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

 

அழகிரி கட்சி ஆரம்பித்தால் திமுக உடையும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி, பொதுக் கூட்டத்தை முடித்து விட்டு செல்லும் வழியில் அங்கிருந்த தமிழ்நாடு பாரம்பரிய உணவு வகை கடையில் டீ குடித்தார். மேலும் டீக்கடையில் இருந்தவர்களுக்கு அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார். தொடர்ந்து கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் வியாபாரம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து கோவில்பட்டியில் பிரபல உணவு வகையான கடலை மிட்டாயை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுவைத்து பார்த்தார். தொடர்ந்து தீப்பெட்டி தொழிலுக்கு பயன்படுத்தப்படக் கூடிய உபகரணங்களையும் மூலப் பொருட்களையும் பார்வையிட்டார். இதனையடுத்து வில்லிசேரியில் பருத்தி விவசாயிகள் உடன் முதல்வர் பழனிசாமி கலந்துரையாடி வருகிறார். மேலும் ராணுவத்தில் உயிரிழந்த கோவில்பட்டியை சேர்ந்த வீரர் கருப்பசாமியின் இல்லத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராணுவ வீரர் கருப்பசாமி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அழகிரி கட்சி ஆரம்பித்தால் திமுக உடையும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முன்னதாக பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.கவின் வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். மிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் தமிழகம் முழவதும் நாளை முதல் விநியோகம். புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் நிவாரண நிதி, விவசாய சங்கங்கள் வரவேற்பு, விவசாயிகள் மகிழ்ச்சி. விவசாயத்திற்கு நீர் தேவை, அதனை சரியாக கொடுக்க வேண்டும் என்பதால்தான் குடிமராமத்து பணிகளை அரசு செய்து வருகிறது. இதன்மூலம் மழை நீரை முழுமையாக சேமிக்க முடிகிறது. 4 ஆண்டுகளில் 9000 கோடி இழப்பீடு கொடுத்தது தமிழக அரசு. படைப்புழுக்களை அழிப்பதற்காக 45 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்தது இந்த அரசு, அமெரிக்கப் படைப்புழுக்களை தடைசெய்தோம்.

வெளிநாடு சென்று ஆய்வு செய்ததில் 65 லிட்டர் பால் கறக்கும் பசுக்களை பார்த்தேன், அதுபோல கலப்பினப் பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகளை குழந்தை போல் இந்த அரசு பாதுகாத்து வருகிறது. ஸ்டாலின் சிந்தித்து பேச வேண்டும். முதல்வராக இல்லை, விவசாயியாக கேட்டு கொள்கிறேன், இனியாவது விவசாயியை ரவுடியோடு ஒப்பிட்டு பேச வேண்டாம், டெண்டர் கேன்சல் செய்து ஒன்றரை வருடம் ஆகும் நிலையில் அதில் ஊழல் என எதிர்கட்சி தலைவர் பச்சை பொய் சொல்லுகிறார்.

அழகிரி கட்சி ஆரம்பித்தால் திமுக உடையும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை உடைக்க வேண்டும், இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று தீய நோக்கத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். விவசாயம் செழித்தால் அனைத்தும் செழிக்கும். திட்டமிட்டு மு.க.ஸ்டாலின் அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார், ஊழலுக்காக களைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக. ஈ டெண்டர் யார் வேண்டுமானாலும் போடலாம், திமுகவில் அப்படியல்ல மகா பொய் பேசுகிறார் மு.க.ஸ்டாலின். ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திமுக. அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம், ஆனால் திமுகவில் அப்படியல்ல, குடும்பம் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் திமுக. நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரே கட்சி அதிமுக, வீட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சி திமுக.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் எங்களை எல்லாம் ஜெயிலில் அடைப்பாராம், திமுகவில் உங்கள் முன்னாள் அமைச்சர் அனைவர் மீதும் பல வழக்குகள் உள்ளது. நாட்டு மக்களை ஏமாற்றி தில்லு முல்லு பண்ணி ஆட்சிக்கு வரலாம் என நினைக்கிறார், விஞ்ஞான வழியில் நாடு முன்னேறி கொண்டிருக்கிறது. நேர்மையான வழியில் மக்களை சந்தித்தால் எதிர்கட்சியாவது கொடுப்பார்கள். இல்லையெனில் அதுவும் கிடைக்காது. முதல்வர் ஆகவேண்டுமென்ற ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது, திமுக உடையாமல் பார்த்து கொள்ளுங்கள், மதுரையில் இருப்பவர் கட்சி தொடங்க வந்துவிட்டார், அவர் ஆரம்பித்து விட்டால் உங்கள் கட்சி தான் உடையும், எங்கள் கட்சி உடையாது” என்று பேசினார்.