முதல்வர் நாளை பங்கேற்க இருந்த தூத்துக்குடி மாவட்ட அனைத்து நிகழ்ச்சியும் ரத்து!

 

முதல்வர் நாளை பங்கேற்க இருந்த தூத்துக்குடி மாவட்ட அனைத்து நிகழ்ச்சியும் ரத்து!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியானது. ஆனால், முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது

முதல்வர் நாளை பங்கேற்க இருந்த தூத்துக்குடி மாவட்ட அனைத்து நிகழ்ச்சியும் ரத்து!

சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், கட்சிகள் அனைத்தும் தேர்தல் பரப்புரையில் களமிறங்கிவிட்டன. அதிமுகவை நிராகரிப்போம் என திமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே வேளையில், முதல்வர் பழனிசாமியும் தேர்தல் பணியில் களமிறங்கிவிட்டார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அவர், அதிமுக ஆட்சியை தக்க வைக்கும் என உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஆளுநர் மாளிகையில் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது