விவசாயிகளை ரவுடியோடு ஒப்பிட்ட ஸ்டாலினை கண்டிக்கிறேன் – முதல்வர் பழனிசாமி

 

விவசாயிகளை ரவுடியோடு ஒப்பிட்ட ஸ்டாலினை கண்டிக்கிறேன் – முதல்வர் பழனிசாமி

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அவினாசியில் நிச்சயமாக சிப்காட்-க்கு நிலம் கையகப்படுத்த மாட்டாது. அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தின் முதற்கட்ட பணிகளை மார்ச் மாதம் நேரடியாக துவக்கி வைக்க உள்ளேன். தமிழகத்தில் 2000 -அம்மா மினி க்ளீனிக்குகளை கொண்டு வந்த அரசு அம்மாவின் அரசு. 71 கோடி மதிப்பீட்டில் சாலை, குடிநீர் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 900-கோடியில் புஷ்பா சந்திப்பு முதல் பாண்டியன் நகர் வரை உயர்மட்ட பாலம் பணிகள் துவங்கப்படவுள்ளது.

விவசாயிகளை ரவுடியோடு ஒப்பிட்ட ஸ்டாலினை கண்டிக்கிறேன் – முதல்வர் பழனிசாமி

எதிர்க்கட்சி தலைவர் விவசாயிகளை ரவுடியோடு ஒப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் போராட்டத்தில் குருவி சுடுவதுபோல் விவசாயிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று அரசு ஊழியர்கள் டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்திற்கு சென்று ஒரு நல்லதும் செய்யாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவின் உறுப்பினர்கள். அம்மாவின் அரசுக்கு நல்ல ஆதரவை அனைவரும் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.