பள்ளிகள் திறப்பு எப்போது?- முதலமைச்சர் பதில்

 

பள்ளிகள் திறப்பு எப்போது?- முதலமைச்சர் பதில்

கொரோனா பரவலால் நாடுமுழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. அவ்வப்போது பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளை அறிவித்துவரும் தமிழக அரசு கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை தொடங்கியது. இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. ஜனவரி 4ஆம் தேதியில் இருந்து காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு எப்போது?- முதலமைச்சர் பதில்

இந்நிலையில் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சுகாதாரத்துறை மற்றும் மக்களின் ஒத்துழைப்பால் பெரம்பலூர் மாவட்டம் கொரோனா மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். கொரோனா தொற்று குறைந்த பிறகே பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்களின் கருத்தை அறிந்துதான் பள்ளிகளை திறக்க முடியும். வாக்குக்காக பிற கட்சியினர் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துகின்றனர்

காவேரி ,கோதாவரி இணைப்பிற்கு தமிழக அரசு முயற்சி எடுத்துவருகிறது. 2 தொகுதிகள் மட்டுமே உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுமருத்துவ கல்லூரி தொடங்கும் சூழல் தற்போது இல்லை. கிடப்பில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தை செயல்ப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. ஜவுளி பூங்கா திட்டமும் தொழில் முனைவோரிடம் கலந்து பேசி திட்டம் செயல்படுத்தப்படும்

ரயில் வழித்தடம் அமைக்க பெரம்பலுரைச் சேர்ந்த ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது கேட்டிருக்கலாம். அவர் செய்யவில்லை. நாங்கள் செய்கிறோம். மத்திய அரசிடம் பேசி ரயில்வழித்தடம் அமைக்க முயற்சிக்கப்படும். கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத்துறைக்கும் எனது பாராட்டுக்கள்” எனக் கூறினார்.