‘ஒரே விமானத்தில் இன்று மதுரை செல்லும் எடப்பாடி பழனிசாமி , மு.க.ஸ்டாலின்’ : காரணம் தெரியுமா?

‘ஒரே விமானத்தில் இன்று மதுரை செல்லும் எடப்பாடி பழனிசாமி , மு.க.ஸ்டாலின்’ : காரணம்  தெரியுமா?

முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் இன்று மாலை மதுரை செல்கின்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை நாளை (30 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும்.

‘ஒரே விமானத்தில் இன்று மதுரை செல்லும் எடப்பாடி பழனிசாமி , மு.க.ஸ்டாலின்’ : காரணம்  தெரியுமா?

ரூ. 4 கோடி மதிப்பிலான சுமார் 13.5 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை தேவர் நினைவாலயம் பொறுப்பாளரிடம் துணை முதல்வர் ஓபிஎஸ் வழங்கினார் .

‘ஒரே விமானத்தில் இன்று மதுரை செல்லும் எடப்பாடி பழனிசாமி , மு.க.ஸ்டாலின்’ : காரணம்  தெரியுமா?

இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையில் கலந்து கெள்வதற்காக இன்று மாலை விமானம் மூலம் மதுரை கிளம்புகிறார் முதல்வர் பழனிசாமி. அதே விமானத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவச் சிலைக்கு மரியாதை செலுத்த மதுரை செல்லவிருக்கிறார். ஏற்கனவே முதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஸ்டாலின் முதல்வரை நேரில் சந்தித்தார். தற்போது குருபூஜைக்காக மதுரை செல்லவிருக்கும் இருவரும் மரியாதை நிமித்தமாக விமானத்தில் பேசிகொள்ள வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஒரே விமானத்தில் இன்று மதுரை செல்லும் எடப்பாடி பழனிசாமி , மு.க.ஸ்டாலின்’ : காரணம்  தெரியுமா?

முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு விமானம் மூலம் நாளை (29ம் தேதி) மதுரை வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக சார்பில் மதுரை விமான நிலையம் வாயிலிருந்து பெருங்குடி அம்பேத்கர் சிலை அருகே வரை உற்சாகமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.