உள்ளாட்சி தேர்தல்- தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கடிதம்

 

உள்ளாட்சி தேர்தல்- தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கடிதம்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையருக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்- தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கடிதம்

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாருக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

அதில், வாக்குப்பதிவை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், பாதுகாப்புப் பணியில் மாநில காவல்துறையினரை ஈடுபடுத்தக்கூடாது,CRPF வீரர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், அதேபோல் வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை வரை வாக்குச்சீட்டுகளை பாதுகாக்க CISF படையினரை ஈடுபடுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். தேர்தலில் பரப்புரைக்கு உரிய கட்டுப்பாடுகளை விதித்து கண்காணிக்க வேண்டும் என்றும், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின் போது கூடுதல் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, வெளிமாநில அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையரிடம் கடிதம் வழியாக எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.