உருவாகிறது புதிய தயாரிப்பாளர்கள் சங்கம்! தொடங்க விழாவில் முதல்வர் பங்கேற்பு!

 

உருவாகிறது புதிய தயாரிப்பாளர்கள் சங்கம்! தொடங்க விழாவில் முதல்வர் பங்கேற்பு!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விரைவில் இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தயாரிப்பாளர் சங்கத்தில், தற்போது படம் தயாரிப்பவர்கள் என்று பட்டியலிட்டால் சுமார் 200 பேர்தான் இருப்பார்கள். மீதி அனைவருமே படம் எடுத்தவர்கள்தான், ஆனால் இப்போது படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்தச் சங்கம் செயல்பட்டு வருவதாகக் கருதுகிறார்கள். இதனால், தற்போது தொடர்ச்சியாக படம் தயாரிப்பவர்களுக்கென ஒரு புதிய சங்கமொன்றை உருவாக்கவுள்ளனர். இந்தச் சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராகவும், டி.சிவா செயலாளராகவும், சத்யஜோதி தியாகராஜன் பொருளாளராகவும் செயல்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சங்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

உருவாகிறது புதிய தயாரிப்பாளர்கள் சங்கம்! தொடங்க விழாவில் முதல்வர் பங்கேற்பு!
ஆடி 18 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள புதிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தொடக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடக்கவிழாவில் திரைப்படங்களுக்கான 8% LBT யை விரைவில் நீக்கி அறிவிப்பு வெளியிடப்போவதாகவும், திரைப்பட படப்பிடிப்புக்கான அனுமதி பற்றி முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.