மோடி அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு; அடுத்தடுத்து டெல்லிக்கு விரையும் ஓபிஎஸ், ஈபிஎஸ்!

 

மோடி அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு; அடுத்தடுத்து டெல்லிக்கு விரையும் ஓபிஎஸ், ஈபிஎஸ்!

பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் டெல்லி சென்றதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் இன்று மாலை டெல்லிக்கு புறப்படுகிறார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓபிஎஸ் இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டார். முன்னறிவிப்பு ஏதுமின்றி அவர் டெல்லிக்கு புறப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் அப்போது எல்.முருகனைத் தவிர தமிழகத்தில் இருந்து யாருக்கும் இடமளிக்கப்படாததால் அதிமுக – பாஜக இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

மோடி அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு; அடுத்தடுத்து டெல்லிக்கு விரையும் ஓபிஎஸ், ஈபிஎஸ்!

தேர்தல் தோல்விக்கு நீங்கள் தான் காரணம் என பாஜகவினரும் அதிமுகவினரும் ஒருவரையொருவர் சாடிக் கொண்டனர். இத்தகைய சூழலில் ஓபிஎஸ் திடீரென டெல்லி புறப்பட்டது உற்று நோக்கப்பட்டது. இந்த நிலையில் ஒபிஎஸ்ஸை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் டெல்லிக்கு செல்லவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு கோவை விமானத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்கிறார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி வேலுமணி உடன் செல்கின்றனர்.

நாளை காலை 11 மணிக்கு இருவரும் பிரதமர் மோடியை சந்திக்கின்றனர். பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.