“எடப்பாடி டாப்; மத்தவங்க எல்லாம் டூப்” ரைமிங்காக கலக்கும் செல்லூர் ராஜூ

 

“எடப்பாடி டாப்; மத்தவங்க  எல்லாம் டூப்” ரைமிங்காக கலக்கும் செல்லூர் ராஜூ

கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது .வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு இயந்திரங்கள் 75 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பதிவான 16 தொகுதிக்கான வாக்கு எந்திரங்கள், சென்னை ராணி மேரி கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது.

“எடப்பாடி டாப்; மத்தவங்க  எல்லாம் டூப்” ரைமிங்காக கலக்கும் செல்லூர் ராஜூ

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ,மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேமுதிக கூட்டணி நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் என 5 முனை போட்டி இருந்தது. இதில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அக்கட்சியினர் தெரிவித்து வரும் நிலையில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராவார் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

“எடப்பாடி டாப்; மத்தவங்க  எல்லாம் டூப்” ரைமிங்காக கலக்கும் செல்லூர் ராஜூ

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ , ” அதிமுக கூட்டணியில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் தமிழகத்தின் முதல்வர் ஆவார்.அதிமுகவின் ஹீரோ எடப்பாடியார் தான் டாப். மற்றவர்கள் எல்லாம் டூப்” என்று கூறியுள்ளார். முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜு, அதிமுக 140 இடங்களில் வெற்றி பெறும், கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 190 இடங்கள் கிடைக்கும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.