திருப்பூரில் வரும் 22 ஆம் தேதி முதல்வர் ஆய்வு!

 

திருப்பூரில் வரும் 22 ஆம் தேதி முதல்வர் ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. அதனால் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இதுவரை கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, நெல்லை, வேலூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 15க்கும் மாவட்டங்களுக்கு நேரில் சென்ற முதல்வர் பழனிசாமி, அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். மேலும் அம்மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் நிதி அளித்து வருகிறார்.

திருப்பூரில் வரும் 22 ஆம் தேதி முதல்வர் ஆய்வு!

இந்நிலையில் திருப்பூரில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வருகின்ற 22 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திருப்பூர் செல்லவிருக்கிறார். அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொள்விருக்கிறார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதோடு, பல்வேறு திட்டப்பணிகளுக்கும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டவிருக்கிறார். முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடுகள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றுவருகின்றன.