கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர்!

 

கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இன்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,951 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களில் சென்றவர்கள் மூலமாக பிற மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர்!

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தின் வளர்ச்சிப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் வருகிற 28-ஆம் தேதி திருவாரூர் செல்கிறார். இதுவரை கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, நெல்லை, வேலூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை முதல்வர் மேற்கொண்டிருக்கிறார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “பொது போக்குவரத்து பயன்பாடு மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து வல்லுனர்களின் அறிக்கையை பொறுத்து தமிழக முதல்வர் முடிவு எடுப்பார். டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு 3 லட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி இந்த ஆண்டு செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இருப்பில் உள்ளது” எனக் கூறினார்.