பணியின் போது லாரி மோதி உயிரிழந்த ஆயுதப்படை காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!

பணியின் போது லாரி மோதி உயிரிழந்த ஆயுதப்படை காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்ட ஆயுதப்படைக் காவலர் பிரபு
குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் -சென்னிமலை நெடுஞ்சாலையில் உள்ள திட்டுப்பரை சோதனைச்சாவடியில் நிறுத்தாமல் சென்ற லாரியை, இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்றபோது காவலர் பிரபு இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று மறிக்க முயன்றுள்ளார்.

பணியின் போது லாரி மோதி உயிரிழந்த ஆயுதப்படை காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!

அப்போது எதிர்பாரதவிதமாக லாரி மோதி பிரபு உயிரிழந்தார். இவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.