“கட்டப்பஞ்சாயத்து தலைவர் ஸ்டாலின் தமிழகத்திற்கு தேவையா?”

 

“கட்டப்பஞ்சாயத்து தலைவர் ஸ்டாலின் தமிழகத்திற்கு தேவையா?”

சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அதனொரு பகுதியாக தாம்பரத்தில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, “திட்டமிட்டு ஸ்டாலின் பொய் பரப்புரையை நாள்தோறும் செய்து வருகிறார். இந்தியாவில் சட்டம், ஒழங்கு சிறப்பாக முதலிடத்தில் உள்ள மாநிலம் தமிழகம், உணவு உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். 36 லட்சம் மெட்ரிக் டன் தஞ்சையில் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளோம். தொழில்துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்.

“கட்டப்பஞ்சாயத்து தலைவர் ஸ்டாலின் தமிழகத்திற்கு தேவையா?”

2006-2011 திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்துறையினர் தொழில் தொடங்க முன்வரவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 3 ஆண்டுகளில் ஜெயலலித்தா அப்பிரச்னையை சரிசெய்தார். தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு குறைந்து 550 பேர் மட்டுமே இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில் கொரோனா தொற்றே கிடையாது. கொரோனோ தொற்று காலத்திலும் தமிழகம் முழுவதும் சென்று கொரோனோவை கட்டுப்படுத்தினேன். தென்காசியில் ரத்துசெய்யப்பட்ட ஒரு சாலை திட்டத்தில் 450 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஸ்டாலின் ஆளுநரிடம் மனுகொடுக்கிறார். இது கேலிக்குறியது. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசுதான்

பிரியாணி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காத்தால் பிரியாணி கடைக்காரரை திமுகவினர் தாக்குகின்றனர். ஸ்டாலின் அடுத்த நாள் பிரியாணி கடைக்காரரிடம் நேரில் போய் பஞ்சாயத்து பேசுகிறார். கட்டப்பஞ்சாயத்து தலைவர் ஸ்டாலின் தமிழகத்திற்கு தேவையா?” எனக் கேள்வி எழுப்பினார்.