20,21இல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி பரப்புரை

 

20,21இல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி பரப்புரை

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் களப்பணியில் அதிரடியாக களமிறங்கிவிட்டன. ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும், இரண்டு மாதத்தில் ஆட்சி கவிழும் என்று விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக 3 ஆண்டுகளாக திறம்பட தமிழகத்தை வழி நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பரப்புரையை முன்னெடுத்து வருகிறார்.

20,21இல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி பரப்புரை

ஒவ்வொரு பரப்புரை கூட்டத்திலும் பொதுமக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பும் விதமாக மக்களின் முதல்வராக, களத்தில் இறங்கி மக்களை கவர்ந்துவருகிறார். இவ்வாறாக கொரோனா காலத்திலும் பல்வேறு ஊர்களுக்கு படையெடுத்து சென்று மக்களின் குறைகளை கேட்டறிகிறார். அதேநேரம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பதிலடிக்கொடுத்துவருகிறார்.

இந்நிலையில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக நாமக்கல், ஈரோடு, தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய தலைவர்களுடன் பரப்புரை மேற்கொண்டார்.