சட்டமன்ற வரலாற்றிலும் சாதனைப்படைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

சட்டமன்ற வரலாற்றிலும் சாதனைப்படைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

15வது சட்டப்பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள். கடந்த 22ஆம் தேதி துணை முதல் ஓ பன்னீர்செல்வம், இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது பேச வாய்ப்பு தராததால் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அதனால் எதிர்க்கட்சியினர் இல்லாமலேயே பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்து விட்டது.

சட்டமன்ற வரலாற்றிலும் சாதனைப்படைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும், வரும் ஏப்ரல் 6ம் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, பதவியேற்கும் கட்சியுடனும் எதிர்கட்சியுடனும் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். அதனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக தனது கடைசி உரையாற்றினார். தனது 4 ஆண்டு ஆட்சிக் காலத்துக்கு உறுதுணையாக இருந்த துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் அமைச்சர்களுக்கும் உருக்கத்துடன் நன்றி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவையில் பேசிய சபாநாயகர் தனபால், “சட்டமன்ற வரலாற்றிலேயே அனைத்து நாட்களும் பங்கேற்ற ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. 2016 முதல் இன்று வரை சட்டப்பேரவை 167 நாட்கள் கூடியுள்ளது. மொத்தம் 858 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைப்பெற்றுள்ளது. அவையில் உரையாற்ற ஆளும் கட்சியைவிட எதிர்க்கட்சிக்கு 16 மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். இதனை தொடர்ந்து 15வது சட்டப்பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.