உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமான அதிமுக! தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்!!

 

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமான அதிமுக! தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்!!

தமிழகத்தில் விடுபட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நடந்துமுடிந்துவிடும் எனவும், ஓரிரு மாதங்களில் நடத்த அரசு திட்டமிட்டுவருவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமான அதிமுக! தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்!!

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணிப்பேட்டை-எஸ்.பி.வேலுமணி, சு.ரவி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், நெல்லை-தளவாய் சுந்தரம், கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, பரமசிவன், சீனிவாசன், இன்பதுரை, கணேசராஜா, வேலூர்- கே.பி,முனுசாமி, அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆர்.கே.அப்பு, வேலழகன், விழுப்புரம்-ஓ.எஸ்-மணியன், சி.வி.சண்முகம், தென்காசி-ஆர்.பி.உதயகுமார், மனோஜ் பாண்டியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, சி.கிருஷ்ணமுரளி, கள்ளக்குறிச்சி- எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், மோகன், குமரகுரு, காஞ்சிபுரம்-திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா,காமராஜ், பெஞ்சமின், சோமசுந்தரம், திருப்பத்தூர்-செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், கருப்பணன், கே.சி.வீரமணி, செங்கல்பட்டு-தங்கமணி, பா.வளர்மதி, சிட்லபாக்கம் ஆர்.ராஜேந்திரன், ஆறுமுகம், கே.பி.கந்தன்” ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.