நிவர் புயலை எதிர்கொள்ள தயாரான எடப்பாடி அரசு – துரித கதியில் மீட்பு பணிகள்!

 

நிவர் புயலை எதிர்கொள்ள தயாரான எடப்பாடி அரசு – துரித கதியில் மீட்பு பணிகள்!

இக்கட்டான சமயத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை வைத்தே ஒரு அரசாங்கத்தின் தரம் முடிவு செய்யப்படும். இந்த வகையில் தமிழகத்தை நெருங்கிவரும் நிவர் புயலைவிட வேகமாக மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது ’எடப்பாடி புயல்’. ஆம்…தமிழக முதல்வர் எடப்பாடியின் மின்னல் வேக செயல்பாடுகளைப் பார்க்கும் அதிகாரிகள்தான் இப்படி எடப்பாடி புயல் என பெயர் சூட்டியிருக்கின்றனர்.

நிவர் புயலை எதிர்கொள்ள தயாரான எடப்பாடி அரசு – துரித கதியில் மீட்பு பணிகள்!


கொரோனா நிவாரணப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க ஆளுநர் பன்வாரிலாலை நேற்று மாலை சந்திக்க இருந்தார் முதல்வர் பழனிச்சாமி. இதற்காக ஆளுநரிடம் அப்பாயின்மெண்டும் வாங்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில்தான் நிவர் புயல் தமிழகத்தின் பல மாவட்டங்களை தாக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இது பற்றிய செய்தி அறிந்ததும் ஆளுநருடனான சந்திப்பை ரத்து செய்துவிட்டு உடனடியாக அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் எடப்பாடி.

நிவர் புயலை எதிர்கொள்ள தயாரான எடப்பாடி அரசு – துரித கதியில் மீட்பு பணிகள்!

இந்த கூட்டத்தில் புயலின் தன்மை குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. புயல் தாக்கும் அபாயமுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைகள் குறித்து முதல்வர் எடப்பாடி சுடச்சுட உத்தரவுகளை பிறப்பிக்க, அவையெல்லாம் அடுத்த நொடியே அந்தந்த மாவட்டங்களுக்கு பாஸ் ஆனது. இந்த வகையில் புயல் தாக்கக் கூடிய மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம், மின் விநியோகம் துண்டிப்பு என பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதுபோலவே மாநிலம் முழுவதும் ஏராளமான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு ஏழை எளிய மக்கள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டங்கள் தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நிலைமைக்கேற்ப முடிவுகள் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நிவர் புயலை எதிர்கொள்ள தயாரான எடப்பாடி அரசு – துரித கதியில் மீட்பு பணிகள்!


இவை எல்லாவற்றிற்கும் மேலாக முதல்வர் எடப்பாடி அனைத்து அதிகாரிகளுடனும் தொடர்புகொண்டு நிலைமைகளை கேட்டறிந்து அதற்கேற்ப உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசு உயரதிகாரி ஒருவர்,’’ கடந்த இரு தினங்களாக முதல்வரின் செயல்பாட்டில் புயல் வேகத்தைக் காண முடிகிறது. நிவர் புயலால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் அவர் குறியாக இருக்கிறார். இதை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளை அடிக்கடி தொடர்புகொண்டு ஆலோசனை நடத்துவதுடன் அடுத்தடுத்து உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார். முதல்வர் இப்படி இயங்கும்போது ஒட்டுமொத்த அரசு எந்திரமுமே ராக்கெட் வேகத்தில் செயல்படுகிறது.
இதனால் கடந்த புயல்களின்போது ஏற்பட்ட பாதிப்புகளை விட மிகக் குறைந்த அளவிலேயே இந்தமுறை பாதிப்பு இருக்கும். இதற்கான முழு பெருமையும் முதல்வர் எடப்பாடியையே சாரும்’’ என்றார்.