“இதெல்லாம் ஒரு கேள்வியா?” – பிஎஸ்பிபி பள்ளி குறித்த கேள்விக்கு தெறித்து ஓடிய எடப்பாடி!

 

“இதெல்லாம் ஒரு கேள்வியா?” – பிஎஸ்பிபி பள்ளி குறித்த கேள்விக்கு தெறித்து ஓடிய எடப்பாடி!

தமிழ்நாட்டில் பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளி பாலியல் விவகாரம் பெரிதும் பேசுபொருளாகியிருந்தது. இதன் மூலம் பல பள்ளிகளிலிருந்தும் மாணவிகள் பலர் புகார்களைத் தெரிவிக்க முன்வந்தனர். ஆனால் பிஎஸ்பிபி பள்ளி தான் பெரிய சர்ச்சைக்குள்ளானது. அதற்குக் காரணமாக அப்பள்ளிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் லாபி என்று சொல்லப்பட்டது. இப்பள்ளியைக் காப்பாற்ற தமிழ்நாடு பாஜக தலைவர்கள் பலரும் குறுக்கே விழுந்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார்கள்.

“இதெல்லாம் ஒரு கேள்வியா?” – பிஎஸ்பிபி பள்ளி குறித்த கேள்விக்கு தெறித்து ஓடிய எடப்பாடி!

மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி வரை விவகாரம் சென்றது. அவரோ பள்ளியை எதாவது செய்தால் திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என எச்சரித்தார். அவர்களில் கடைசி வரை யாரும் மாணவிகளுக்கு ஆதரவாக யாரும் கருத்து சொல்லவில்லை. முழுக்க முழுக்க பள்ளியின் பெயர் கெட்டுப் போகக் கூடாது என்பதில் தெளிவாக காய் நகர்த்தினார்கள். இவ்விவகாரத்தில் பள்ளிக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வளவு நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் குற்றங்களை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தை கேள்விக்குட்படுத்தினர். பள்ளியை இழுத்து மூடவும் குரல்கள் வலுத்தன.

“இதெல்லாம் ஒரு கேள்வியா?” – பிஎஸ்பிபி பள்ளி குறித்த கேள்விக்கு தெறித்து ஓடிய எடப்பாடி!

இப்பிரச்சினை குறித்து பலரிடம் கருத்து கேட்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுவரை வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. மருந்துக்கு கூட அறிக்கை விடவில்லை. எந்தக் கண்டனமோ இதுவரை தெரிவிக்கவில்லை. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார். அப்போது ஒரு செய்தியாளர், பிஎஸ்பிபி பள்ளி குறித்து கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதில் எதுவும் கூறாமல் எடப்பாடி நடையைக் கட்டினார். முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களைப் பார்த்து, “இதெல்லாம் ஒரு கேள்வியா?” என்று கோபத்துடன் கேட்டுவிட்டு அங்கிருந்து விடைபெறுகிறார். இதுதொடர்பாக எடப்பாடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள், “ஒருவேளை எடப்பாடியே மீண்டும் முதலமைச்சர் ஆகியிருந்தால் பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம் ஹாயாக இருந்திருக்கும். அனைத்து பிரச்சினைகளும் மூடி மறைக்கபப்ட்டிருக்கும்” என்று கடுகடுக்கிறார்கள்.