“கோடநாடு வழக்கில் என்னை சேர்க்க சதி” – முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு!

 

“கோடநாடு வழக்கில் என்னை சேர்க்க சதி” – முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு!

கோடநாடு வழக்கில் என் பெயரையும் முன்னாள் அமைச்சர்கள் பெயரையும் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை மீண்டும் கூடியது. அப்போது கோடநாடு கொலை வழக்கில் அரசு விசாரணை நடத்துவதை கண்டித்து அதிமுகவினர் பதாகைகளை ஏந்தியபடி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அதிமுகவினர் வெளியேறிய நிலையில் பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

“கோடநாடு வழக்கில் என்னை சேர்க்க சதி” – முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு!

பின்னர் சட்டப்பேரவை வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுகிறது திமுக அரசு. அரசின் செயலை கண்டிக்கும் வகையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். எதிர்கட்சி தலைவர் பேச வாய்ப்பு அளிக்கவில்லை. ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. அதிமுகவை செயல்படவிடாமல் நசுக்க முயற்சிக்கிறது திமுக அரசு. இன்றும் நாளையும் சட்டப்பேரவையை புறக்கணிக்கிறோம் என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ், கோடநாடு வழக்கில் என்னையும் சிலரையும் சேர்க்க சதித்திட்டம் நடத்துகிறது திமுக அரசு. சயான் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் எனது பெயரை சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நீதிமன்ற விசாரணைகள் எதுவும் கூறாத நிலையில் மீண்டும் போலீஸ் விசாரணை நடத்தப்படுவது ஏன்?. நீதிமன்றத்தில் உள்ள கோடநாடு வழக்கு முடியும் வநிலையில் ரையில் மீண்டும் விசாரிக்கிறது திமுக அரசு என்றார். மேலும், தன் மீது வீண் பழி சுமத்த வழக்கு ஜோடிக்கிறார் என்றும் திட்டமிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வீண் பழி சுமத்துகிறார் என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.