darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



எல்லாம் போச்சே... டி.டி.வியால் தவிக்கும் எடப்பாடி..!

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சியாக மாறிவிட்டது. அமமுகவை பதிவு செய்யக் கூடாது என்று அதிமுக தரப்பு செய்த முயற்சிகள் வீணாகிப் போனது. இதனால் அதிமுக தரப்பு வருத்தத்தில் இருக்கிறது. அதே சமயம் கட்சி பதிவு பெறுவதற்குள் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளுக்கு தாவி விட்டதால் பதிவு பெற்றும் பலனில்லாமல் டி.டி.வி.தினகரன் தவிக்கிறாராம்.ttv

ஊரக பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு இல்லாத காரணத்தால் சில மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி ஒன்றிய, கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளை கைப்பற்றி தன் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் டி.டி.வி.தினகரன் இருப்பதாக அவரின் கட்சிக்காரர்களே சொல்கின்றனர். வெற்றி பெற்றால் கட்சியை மீண்டும் வலுவாக கட்டமைக்கலாம் என்பது டி.டி.வி.யின் திட்டமாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பதால் டி.டி.வி வெறிச்சோடி கிடக்கிறார்.
 

2018 TopTamilNews. All rights reserved.