எடப்பாடிக்கு கிடைத்த அதிகாரம்; கடுப்பில் ஓபிஎஸ்

 

எடப்பாடிக்கு கிடைத்த அதிகாரம்; கடுப்பில்  ஓபிஎஸ்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆளும்கட்சி கட்சிக்கு நிகரான அதிகாரமும், தகுதியும் உண்டு.

எடப்பாடிக்கு கிடைத்த அதிகாரம்; கடுப்பில்  ஓபிஎஸ்

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது அதிமுகவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை தலைமையை நிலவி வந்த நிலையில் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் பன்னீர்செல்வமா? அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்ற போட்டி நிலவி வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் யார் என முடிவு செய்யப்படாமலேயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

எடப்பாடிக்கு கிடைத்த அதிகாரம்; கடுப்பில்  ஓபிஎஸ்

இந்நிலையில் நேற்று நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி என்பது ஆளும் கட்சிக்கு நிகரான தகுதியை சட்டப்பேரவையில் பெறுகிறது. எதிர்க்கட்சியாக அமரப் குறைந்தபட்சம் 24 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவருக்கு அலுவலக அறை, வாகனம், பணியாளர் உள்ளிட்ட வசதிகளும் அளிக்கப்படும். லோக் ஆயுக்தா உள்ளிட்ட குழுக்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கும் முக்கிய இடம் உண்டு.