திருப்பத்தூர்-போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி- ரூ.20 கோடி சொத்துகளை முடக்கிய வருமான வரித்துறை

திருப்பத்தூர்-போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி- ரூ.20 கோடி சொத்துகளை முடக்கிய வருமான வரித்துறை

திருப்பத்தூர்-வாணியம்பாடி

போலி ஆவணங்கள் மூலம் , முன்னாள் வங்கி மேலாளர் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபருக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த கலீல் ரகுமான், சிராஜுதீன் ஆகியோர் வாணியம்பாடியில் சஃபா லெதர்ஸ் மற்றும் நஃபீசா ஓவர்சீஸ் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்-போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி- ரூ.20 கோடி சொத்துகளை முடக்கிய வருமான வரித்துறை
நஃபீசா ஓவர்சீஸ்

இவர்கள் இந்த நிறுவனங்களின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம், 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரை, சென்னை கிண்டியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றிய டாமி ஜி. பூவாட்டில் என்பவருடன் இணைந்து 23.46 கோடி கடன் பெற்று அதைத் திருப்பி செலுத்தவில்லை என தெரியவந்தது.

இதனை அடுத்து இந்தியன் வாங்கி அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் கலீல் ரகுமான்,சிராஜுதீன் மற்றும் மேலாளர் பூவாட்டில் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மோசடி செய்து பெற்ற பணத்தை வைத்து, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்து சொத்துக்களை குவித்ததால் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

திருப்பத்தூர்-போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி- ரூ.20 கோடி சொத்துகளை முடக்கிய வருமான வரித்துறை
நஃபீசா ஓவர்சீஸ்

இவர்கள் மோசடியில் சொத்துக்கள் வாங்கியது உறுதியதானதால் தற்பொழுது தொழிலதிபர் ரகுமானுக்கு சொந்தமான வாணியம்பாடி கோனமேடு தொழிற்பேட்டையில் உள்ள இடம், சென்னையில் அடுக்கு மாடிகுடியிருப்பு, வேலூரில் உள்ள காலி மனை உள்ளிட்ட 6 அசையா சொத்துக்களை முடக்கி உள்ளனர்.

திருப்பத்தூர்-போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி- ரூ.20 கோடி சொத்துகளை முடக்கிய வருமான வரித்துறை
சிபிஐ வழக்கு பதிவு

முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 20.65 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இது குறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.