தமிழகத்தில் 2 மாதங்களில் பொருளாதார நிலை உயரும்!

 

தமிழகத்தில் 2 மாதங்களில் பொருளாதார நிலை உயரும்!

தமிழகத்தில் 2 மாதங்களில் பொருளாதார நிலை கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாகத் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால்  தனிநபர் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டனர்.  இதனால் மீண்டும் பொருளாதாரத்தை  உயர்த்தும் நோக்கில், ரிசர்வ் வங்கியின் முன்னாள்  ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், முன்னாள் தலைமைச் செயலர் என்.நாராயணன்,சென்னைப் பல்கலை துணைவேந்தர், பி.துரைசாமி, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் என்.குமார், சென்னை பொருளாதாரப் பள்ளி இயக்குநர் கே.ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். 

தமிழகத்தில் 2 மாதங்களில் பொருளாதார நிலை உயரும்!


இந்த குழுவானது பொருளாதார பாதிப்பு, அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகள்,  பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வழிமுறைகள், மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டது. 

தமிழகத்தில் 2 மாதங்களில் பொருளாதார நிலை உயரும்!


இந்நிலையில் தமிழக பொருளாதாரத்தை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கையை முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து  ரிசர்வ் வங்கியின் முன்னாள்  ஆளுநர் .  சி.ரங்கராஜன் சமர்ப்பித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியா அவர், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்பது குறித்தது பரிந்துரை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டது. 2020-21 இல் பொருளாதார வளர்ச்சி 1.71% ஆக இருக்கும் என் கணித்துள்ளோம் . தமிழகத்தில் 2 மாதங்களில் பொருளாதார நிலை  கொரோனாவுக்கு  முந்தைய   நிலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது.  நவம்பர் வரை இலவச அரிசி திட்டத்தை மேலும் நீட்டிக்க பரிந்துரைத்துள்ளோம். மேலும் குறுகிய மற்றும் நீண்ட கால  அடிப்படையில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர் , நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை மற்றும் காவல் துறைக்கு மேலும் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.