இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார நிலைமைகள் சரியாகும்- நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார நிலைமைகள் சரியாகும்- நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

டெல்லி

இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார நிலைமைகள் பழைய நிலைமைக்கு திரும்பி விடும் என 62 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார நிலைமைகள் சரியாகும்- நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், கொரோனா ஊரடங்கு காரணமாக தேவை குறைந்திருப்பதுதான் மிகப்பெரிய சவால் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தற்போது தொழில் நடவடிக்கைகள் மேம்பட்டு வருவதால், ஆண்டு இறுதிக்குள் பழைய நிலைக்கு திரும்பி விடுவோம் என 62 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார நிலைமைகள் சரியாகும்- நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 50 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன. ஜூலை மாதத்தில் 25 சதவீதமாக இருந்த தொழில் ஒப்பந்தங்கள், ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளன. அதுபோல நிறுவனங்களுக்கான வருமானமும் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.