தொடர் மழை எதிரொலி – குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

 

தொடர் மழை எதிரொலி – குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

தென்காசி

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

தொடர் மழை எதிரொலி – குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டவில்லை. கடந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்படாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசு குற்றாலம் பகுதி பொதுமக்கள் மற்றும் சீசன் கால வியாபாரிகள் நலன்கருதி, இந்த ஆண்டு சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்லவும், அருவிகளில் குளிக்கவும் உரிய விதிமுறைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.