ரயான் நூல் விலை உயர்வு எதிரொலி… உற்பத்தியை நிறுத்திய ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள்…

 

ரயான் நூல் விலை உயர்வு எதிரொலி… உற்பத்தியை நிறுத்திய ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள்…

ஈரோட்டில் ரயான் நூல் விலை உயர்வை கண்டித்து, விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் 11 நாட்களுக்கு ரயான் துணி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு, சித்தோடு, லக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் 30 ஆயிரம் விசைத்தறிகளில் ரயான் வகை துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்குள் ரயான் நூல் வகைகளுக்கு கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரயான் நூல் விலை உயர்வு எதிரொலி… உற்பத்தியை நிறுத்திய ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள்…

ஆனால், உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் ரயான் துணிகள் மீட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் முதல் 4 ரூபாய் 50 காசுகள் வரை நஷ்டம் அடைந்து வந்தனர். இதனால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்த நிலையில், நஷ்டத்தை சமாளிக்க இன்று முதல் வருகிற 21 ஆம் தேதி வரை ரயான் துணிகளின் உற்பத்தியை நிறுத்த விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்திருந்தனர்.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் ரயான் துணி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்படுவதாக கூறிய விசைத்தறி உரிமையாளர்கள், இதனால் 7 கோடி வருவாய் வரை இழப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.