டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி : தனது பங்குகளை கைமாத்தி விட்ட அதானி !?

 

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி : தனது பங்குகளை கைமாத்தி விட்ட அதானி !?

அதானி நிறுவனத்தின் துணை நிறுவனமான, அதானி லாஜிஸ்டிக்ஸ், தனது 7.61 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நவம்பர் 27ஆம் தேதிக்கும் டிசம்பர் 14 ஆம் தேதிக்கும் இடையில் இந்த பங்குகளை விற்பனை செய்துள்ளதாக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்புக்கு அதானி லாஜிஸ்டிக்ஸ் தகவல் அளித்துள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி : தனது பங்குகளை கைமாத்தி விட்ட அதானி !?

இந்த பங்குகளை ஸ்நோமேன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1.2 கோடி பங்குகளை, ரூ.59.21 தோராய விலையில் விற்பனை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஸ்நோமேன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 18.39 சதவீத பங்குகளை அதானி கையக்கப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பரில் ஸ்நோமேன் நிறுவனத்தின் நிறுவனர் பங்குகளையும், பொதுப்பங்குகளையும் சுமார் ரூ. 296 கோடிக்கு அதானி வாங்கியது. அப்போது ரூ.44 விலையில் பங்குகள் வாங்கப்பட்டன. இந்த நிலையில், வாங்கிய நிறுவனத்திடமே , திரும்பவும் அதானி நிறுவனம் பங்குகளை விற்பனை செய்துள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி : தனது பங்குகளை கைமாத்தி விட்ட அதானி !?

சமீபத்தில் விவசாயிகளின் போராட்டம் காரணமாக அதானி நிறுவனம் விளக்கம் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளானது. குறிப்பாக இந்தியா முழுவதும், துறைமுகம், போக்குவரத்து, தானிய கிடங்கு, குளிர்பதன சேமிப்பு கிடங்குகளை அதானி நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அதானி நிறுவனத்தின் இந்த உள்கட்டமைப்பு காரணமாக , வேளாண் சட்டங்கள் அதானி நிறுவனத்துக்கு சாதகமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி இருந்தனர். அதானி நிறுவனம் ஏற்கெனவே, மத்திய அரசின் உணவு தானிய சேமிப்பு ஒப்பந்தங்களை வைத்துள்ளது. இந்த நிலையில், விவசாயச் சட்டங்கள், விவசாயிகளிடம் இருந்து விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கு தனியார் நிறுவனங்களை அனுமதிக்கிறது. இதனால், அதானி நிறுவனத்தின் வசதிகளுக்கு ஏற்ப சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் குற்றம் சாட்டி இருந்தனர். இதையடுத்து, தாங்கள் கொள்முதலில் ஈடுபடவில்லை என அதானி நிறுவனம் சமீபத்தில் விளக்கம் அளித்திருந்தது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி : தனது பங்குகளை கைமாத்தி விட்ட அதானி !?

இந்த நிலையில், குளிர்பதன கிடங்குகளில் இருந்து பொருட்களை விநியோகம் செய்யும் ஸ்நோமேன் லாஜிஸ்டிக்ஸ் பங்குகளை அதானி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. விவசாயப் போராட்டம் தீவிரமடைந்துள்ள இந்த 20 நாட்களில் இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பங்குகளை வாங்கிய நிறுவனத்திடமே, அதானி நிறுவனம் திரும்பவும் விற்பனை செய்துள்ளது தொழில் துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.