“என்னது இந்தியா விட்டுக்கொடுத்திருச்சா?” – இங்கிலாந்தின் டகால்டி அறிக்கையால் கொதித்தெழுந்த ரசிகர்கள்!

“என்னது இந்தியா விட்டுக்கொடுத்திருச்சா?” – இங்கிலாந்தின் டகால்டி அறிக்கையால் கொதித்தெழுந்த ரசிகர்கள்!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ரேபிட் ரெஸ்டில் கொரோனா உறுதிசெய்யப்படும் வரை இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகள் சிறப்பாகவே நடந்துகொண்டிருந்தன. ஆர்டிபிசிஆர் சோதனையிலும் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பிசிசிஐக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் ஜர்க் ஆனார்கள். அவரைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவே அச்சத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்றனர்.

“என்னது இந்தியா விட்டுக்கொடுத்திருச்சா?” – இங்கிலாந்தின் டகால்டி அறிக்கையால் கொதித்தெழுந்த ரசிகர்கள்!

இதெல்லாம் ஓவலில் நான்காவது டெஸ்ட் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அரங்கேறிய சம்பவங்கள். இருப்பினும் இந்தச் சவால்களைச் சமாளித்து அந்தப் போட்டி நடத்தப்பட்டு இந்திய அணி அபார வெற்றிபெற்று 2-1 என்ற முன்னிலை வகித்தது. இச்சூழலில் யாருக்கு கோப்பை என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி மான்செஸ்டரில் நடைபெறவிருந்தது. ஆனால் நேற்று மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்படவே உடனடியாக பயிற்சி ரத்து செய்யப்பட்டது. தற்போது பாதுகாப்பு காரணமாக இறுதிப் போட்டியை ரத்துசெய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் அதுவல்ல விஷயம். அந்த வாரியம் வெளியிட்ட அறிக்கை தான் சர்ச்சையைக் கிளப்பியது.

“என்னது இந்தியா விட்டுக்கொடுத்திருச்சா?” – இங்கிலாந்தின் டகால்டி அறிக்கையால் கொதித்தெழுந்த ரசிகர்கள்!
பழைய அறிக்கை

முதலில் வெளியிட்ட அறிக்கையில், பிசிசிஐயும் தாங்களும் பேசி போட்டியை ரத்து செய்வதாக முடிவெடுத்துள்ளோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல “பயிற்சி முகாமிற்குள் கொரோனா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருந்தத்தக்க வகையில் இந்தியா அணியை களமிறக்க முடியவில்லை. இதனால் இந்தியா போட்டியை இழந்தது (forfeit)’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Forfeit என்றால் விட்டுக்கொடுத்தல் என்று பொருள், அதாவது இந்தியா தோற்றுவிட்டதாக சொல்லப்பட்டிருந்தது.

“என்னது இந்தியா விட்டுக்கொடுத்திருச்சா?” – இங்கிலாந்தின் டகால்டி அறிக்கையால் கொதித்தெழுந்த ரசிகர்கள்!
திருத்திய அறிக்கை

இந்த வரிகள் இந்திய ரசிகர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை வெளுத்து வாங்கவே, உடனடியாக அறிக்கையை மாற்றி வெளியிட்டது. திருத்திய அறிக்கையில் வருந்தத்தக்க வகையில் இந்தியாவால் ஒரு அணியை களமிறக்க முடியவில்லை என்று மட்டும் கூறியிருக்கிறது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா முன்னிலையே உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டி வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்திருப்பதால் கடைசி போட்டி எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை.